பிக் பாஸ் 3 தமிழில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இதில் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். நேற்று மாடல் அழகியான மீரா மிதுன் 16வது போட்டியாளராக கலந்து கொண்டார். 

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளில் நடைபெற்ற சில காட்சிகள் நேற்று இரவு ஒளிபரப்பபட்டது. அதில் சின்ன திரை நட்சத்திரமான நடிகர் கவின், நடிகை ஷெரின் பற்றி சாக்ஷியிடம் தெரிவிக்கிறார். அப்போது, "துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஷெரின் அந்த படம் வெளியான போதே... தனக்கு மிகவும் பிடிக்கும்... பிக் பாஸ் வீட்டிற்குள் ஷெரின் வரும் போதே சாக்ஷியை பார்த்து, இப்போதே ஷெரினை உஷார் பண்ணி நம்மோட பிரண்டா வச்சுக்கோ" என தான் ஏற்கனவே தெரிவித்ததாக கவின் தெரிவிக்கிறார். அப்போது, ஷெரின் உடன் இருக்கவே, கவின் சொல்வதை எல்லாம் கேட்டு சிரிக்கிறார். 

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு காதல் கதை தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம். அதன்படியே அபிராமிக்கு கவின் மீது ஒரு கிரஷ் ஏற்பட்டு உள்ளது. ஆனால் கவினுக்கோ ஷெரின் மீது அதிக பிரியம் உள்ளது.. இப்படியுமாக செல்கிறது பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு நாட்களிலேயே இப்படி ஒரு காதல் கதை தொடங்கி உள்ளதால்,100 நாட்கள் முடிவதற்குள் என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது பிக்பாங்ஸ் நிகழ்ச்சி.