பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 86 நாட்களாக, பல அவமானங்களுக்கு மத்தியிலும் லாஸ்லியாவை ’மகளே மகளே’ என்று கொஞ்சி வந்த சேரப்பா திடீரென லாஸ்லியாவைக் கண்டுகொள்ளாமல் ஷெரின் மேல் பாசம் காட்டத்துவங்கியிருப்பது பார்வையாளர்களின் புருவத்தை உயர்த்தியிருக்கிறது.

பிக்பாஸ் புரோமோவின் 87 வது நிகழ்ச்சி காணொளி தற்போது பகிரப்பட்டுள்ளது. அதில் ஒளிபரப்பாகும் புதிய டாஸ்க் ஒன்றின்படி போட்டியாளர்கள் பை ஒன்றை முதுகில் மாட்டுக்கொண்டு வட்டத்திற்குள் ஓட வேண்டும், பின்னால்  ஓடி வருபவர்கள், முன்னால் ஓடுபவர்களின் முதுகில் உள்ள பையில் உள்ள தெர்மாகோல் பால்களை வெளியே எடுக்க வேண்டும். இது தான் டாஸ்க். 

 இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஈடுபடும் போது லாஸ்லியா வழுக்கி கீழே விழுந்து காலில் அடிபட்டுவிடுகிறது. தனது அன்பு மகள் கீழே விழுவதை சேரன் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. அதே சமயம், ஓடியதில் கால் வலி ஏற்பட்ட ஷெரினுக்கு அவர் கால் அமுக்கி விடுகிறார். இந்த புரோமோ பார்வையாளர்களை பயங்கரமாகக் குழுப்பியுள்ளது.

நிகழ்ச்சியின் துவக்கநாளிலிருந்து ஏதோ முன் ஜென்ம பந்தம் போல் லாஸ்லியாவை மகளாக ஏற்றுக்கொண்ட சேரன், லாஸ்லியா கவின் சொல்லைக் கேட்டு சேரனை நிராகரித்தபோதும் விடாமல் பாசத்தைப் பொழிந்துவந்தார். அவர் லாஸ்லியாவுடன் காட்டும் நெருக்கம், அவரைத் தொட்டுப்பேசுவது,கட்டிப்பிடிப்பது,கன்னத்தைத் தடவுவது போன்றவை கடுமையாக விமர்சிக்கப்பட்டன. ஆனாலும் சேரன் பிடிவாதமாக லாஸ்லியாவைக்  கொஞ்சி வந்தார். இந்நிலையில் அவர் திடீரென நடிகை ஷெரினுக்கு காலை அமுக்கிவிடுவது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.