cheran asking question for rajini
ரஜினி தான் அரசியலுக்கு வருவது குறித்து நேற்று சூசகமான அறிவிப்பு ஒன்றை ரசிகர்கள் சந்திப்பில் போது தெரிவித்தார்.
அவர் அரசியலுக்கு வருவது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் வட்டாரத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துவரும் நிலையில்.
இயக்குனரும், நடிகருமான சேரன், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது... வணக்கம் சார். உங்களை எப்படியும் முதல்வர் ஆக்கியே தீருவார்கள் உங்கள் ரசிகர்கள். காரணம் இப்போதைய அரசியல் சூழல் அதை உருவாக்கும். மக்களிடமும் நேர்மை குறைந்துள்ளதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.
களவும் ஊழலும் லஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா?
உங்களுக்கு பொய்யே பேசவராதே. கர்நாடகாவை எதிர்க்க வேண்டும், இந்தி திணிப்பை ஆதரிக்ககூடாது, இலவசங்கள் கொடுத்தே ஆகவேண்டும், மதுக்கடைகள் மூடக்கூடாது என சவால்கள் நிறைய. நீங்கள் நினைப்பது நடக்கவேண்டுமெனில் மக்களோடு களமிறங்குங்கள், கலந்து பேசுங்கள். ஏரியா வாரியாக பிரச்சினைகளை தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
