சென்னையில் சில வருடங்களுக்கு முன் மர்ம ஆசாமி அரங்கேற்றி வந்த நாச வேலையால், நடு இரவில் போலீசில் வசமாக சிக்கி யோகி பாபு, தர்மஅடி வாங்கிய சம்பவம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் யோகிபாபு. இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை மட்டும் அல்ல பிரபலங்களையும் கவர்ந்து விட்டது.

இதனால் இவருக்கு முன்னணி நடிகர்கள் கூட அவர்களுடைய படத்தில் நடிக்க வைக்க ரெகமெண்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது.  நடிகை நயன்தாரா, இவருடைய மிகப்பெரிய ரசிகையாகவே மாறிவிட்டாராம்.

இதனால் 'கோலமாவு கோகிலா' படத்தை தொடர்ந்து நடித்த, 'விஸ்வாசம்' படத்தில் ரெக்கமெண்ட் செய்து இவரை நடிக்க வைத்தார்.  மேலும் அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படத்திலும் யோகிபாபு நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இவர் போலீசில் சிக்கி அடிவாங்கிய சம்பவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். "யோகிபாபு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த போது ஒரு சில நாடகங்களில் நடித்து வந்தார். ஒரு முறை நாடகம் முடிந்து நள்ளிரவு வேளையில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த நேரம் வேறு சென்னையில் மர்ம ஆசாமி ஒருவர் பைக் மற்றும் கார்களுக்கு பெட்ரோல் ஊத்தி நெருப்பு வைத்து எரித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இதனால் ஒருவேளை இந்த ஆசாமி யோகி பாபு ஆக இருக்கலாம் என போலீசார் நினைத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது காது நரம்புகள் வலிக்கும் அளவிற்கு அடித்துள்ளனர். பின் நாடகத்தில் நடித்து விட்டு வந்ததாக யோகிபாபு நிரூபித்த பிறகு காவல் நிலையத்தில் இருந்து விடுவித்தார்களாம்".