14வது, சென்னை சர்வதேச திரைப்படவிழா நாளை முதல் தொடங்க உள்ளது. இந்த விழா நடத்த அனுமதி கேட்டு நடிகை சுகாசினி மற்றும் திரைப்பட இயக்குனர் மனோ பாலா ஆகியோர் முதலமைச்சர் ஓ . பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்தனர்.

அப்போது இந்த விழா பற்றி பேசிய சுகாசினி, இந்த விழாவிற்காக ஓவ்வொரு வருடமும்  தாங்கள்  முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகே இந்த விழா நடக்கிறது என்று கூறினார்.

அதே போல் இந்த வருடம் தற்போதய முதலமைச்சர் ஓ .பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆசி பெற வந்ததாக கூறினார் . மேலும் இந்த வருடம் மிகவும் எளிமையாக இந்த திரைப்பட விழா நடக்க உள்ளதாகவும், ஆனால் அடுத்த வருடம் இதே போல இருக்காமல் பிரமாண்டமாக கொண்டாடுவதற்காக ஒரு சில கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைத்துள்ளதாக சுகாசினி கூறினார் .

இதில் தமிழ்  சினிமா 100 வருடங்களை கடந்து விட்டது ஆகையால் , தமிழ்  சினிமாவிற்கு ஒரு சின்னம் வழங்க வேண்டும்,பல ஜாம்பவான்கள் இந்த தமிழ் துறையில் சாதனை படைத்ததால் தமிழ் துறைக்கு ஒரு மியூசியம் அமைத்து தர  வேண்டும் என்பது போல சில கோரிக்கைகள் வைத்துள்ளதாக கூறினார்.