Asianet News TamilAsianet News Tamil

திரிஷா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த மன்சூர் அலிகானுக்கு செம்ம டோஸ் கொடுத்த நீதிமன்றம்

நடிகை திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்ந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செம்ம டோஸ் கொடுத்துள்ளார்.

Chennai highcourt condemns mansoor ali khan for filing defamation case against trisha gan
Author
First Published Dec 11, 2023, 6:29 PM IST

நடிகர் மன்சூர் அலிகான் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசி இருந்தார். அவரின் கொச்சையான பேச்சால் கடுப்பான திரிஷா, அவருக்கு கண்டனம் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த குஷ்பு, லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி ஆகியோர் மன்சூர் அலிகானின் செயலை கண்டித்தனர். குறிப்பாக நடிகை குஷ்பு மகளிர் ஆணையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார்.

இதையடுத்து மகளிர் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜரான மன்சூர் அலிகான், அன்று இரவே திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து திரிஷாவும் அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக சோசியல் மீடியாவில் பதிவிட்டார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Chennai highcourt condemns mansoor ali khan for filing defamation case against trisha gan

இதோடு முடிந்துவிட்ட இந்த பிரச்சனையை மீண்டும் தூசிதட்டி எடுத்த மன்சூர் அலிகான், தான் மரணித்துவிடு என்று சொன்னதை மாற்றி மன்னித்துவிடு என தனது உதவியாளர் எழுதிவிட்டதாகவும், திரிஷா மீதும் குஷ்பு மற்றும் சிரஞ்சீவி மீதும் ரூ.1 கோடி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் மன்சூர் அலிகான்.

அவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிருப்தி அடைந்த நீதிபதி, நீங்கள் இவ்வாறு பேசியதற்காக திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பொதுவெளியில் எப்படி நடந்துகொள்வது என்பதை மன்சூர் அலிகான் உணர வேண்டும். அதுமட்டுமின்றி நடிகர்களை பல இளைஞர்கள் ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொதுவெளியில் இப்படி நீங்கள் நடந்துகொள்ளலாமா எனறும் தான் எந்த தவறும் செய்யவில்லை எனக்கூறும் மன்சூர் அலிகான் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டாரா? என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கில் திரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி தரப்பு விளக்கம் அளிக்கக்கோரி வழக்கு விசாரணையை டிசம்பர் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படியுங்கள்... போதும்டா சாமி ஆளவிடுங்க.... பிக்பாஸில் இருந்து அதிரடியாக விலக முடிவெடுத்த கமல்ஹாசன்? அப்போ அடுத்த host இவரா?

Follow Us:
Download App:
  • android
  • ios