Asianet News TamilAsianet News Tamil

நடிகர் சங்கத்துக்கான மறு தேர்தலை ஊர்ஜிதம் செய்யும் சென்னை உயர்நீதி மன்றம்...

விஷாலின் எதிரணியைச் சேர்ந்த ஐசரி கணேஷ் சொன்னதைப்போலவே நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடக்கவிருப்பதை நேற்று சென்னை உயர்நீதி மன்றமும் உறுதி செய்துள்ளது. இதுவரை தேர்தல் முடிவுகளை எண்ணும் வழக்குக்கு தேதி சொல்லி தீர்ப்பை ஒத்தி வைத்து வந்த நீதிமன்றம் நேற்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
 

chennai high court stays the judgement of nadigar sangam election
Author
Chennai, First Published Nov 16, 2019, 4:50 PM IST

விஷாலின் எதிரணியைச் சேர்ந்த ஐசரி கணேஷ் சொன்னதைப்போலவே நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடக்கவிருப்பதை நேற்று சென்னை உயர்நீதி மன்றமும் உறுதி செய்துள்ளது. இதுவரை தேர்தல் முடிவுகளை எண்ணும் வழக்குக்கு தேதி சொல்லி தீர்ப்பை ஒத்தி வைத்து வந்த நீதிமன்றம் நேற்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.chennai high court stays the judgement of nadigar sangam election

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷாலும், நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய கோரி சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமீன் உள்ளிட்டோரும் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்குகளை நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார். விசாரணையின் போது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கடந்த ஜுன் 23 ம் தேதி நடந்த தேர்தலில் 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்றும் பதவி காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் எனவும் வாதிடப்பட்டது.மேலும், நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பார்கள் எனவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிடப்பட்டது.ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டது. நடிகர் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து அச்சங்கத்தின் பதவிக் காலம் முடிவடைந்த நிர்வாகிகள் வழக்கு தொடர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.chennai high court stays the judgement of nadigar sangam election

நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்களிடம் விளக்கம் பெற்ற பிறகே சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். இதையடுத்து நடிகர் சங்க தேர்தல் வழக்குகளில் முடிவு எட்டும் வரையோ அல்லது ஓர் ஆண்டிற்கோ சிறப்பு அதிகாரியை நியமிப்பது என அரசு உத்தரவிட்டது.எனவே நடிகர் கார்த்தி மற்றும் நாசர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தெரிவிக்கப்பட்டிருந்தது.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கல்யாண சுந்தரம், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

இந்த தீர்ப்பின் மூலம் நடிகர் சங்கத்துக்கு ஏற்கனவே நடந்த தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் சூழலுக்கான வாய்ப்பு சுத்தமாகக் குறைந்துவிட்டது. மீண்டும் மறுதேர்தல் நடப்பதற்கான வாய்ப்பே அதிகரித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios