Chennai High Court send notice to Rajinikant Ranjith Dhanush

காலா திரைப்பட வழக்குத் தொடர்பாக நடிகர் ரஜினி, இயக்குநர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தனுஷ் ஆகிய மூவரும் ஜூன் 23-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் கெடு வைத்துள்ளது.

ரஞ்சித் இயக்கும் காலா படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

காலா படத்தின் தலைப்பு மற்றும் கதை தன்னுடையது எனவும், 1996-ஆம் ஆண்டே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தில் அவற்றை பதிவு செய்து விட்டதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை விசாரித்த நீதிபதி தமிழரசி, இது தொடர்பாக பதில் அளிக்க எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.

நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ஜூன் 23-ஆம் தேதிக்குள் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தனுஷ் ஆகிய மூவரும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.