சின்ன பட்ஜெட் படமாச்சே பொழச்சிப் போகட்டும் என்று கொஞ்சமும் கருணை காட்டாமல் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தை, படம் ரிலீஸான இரண்டே மணி நேரங்களில் வெளியிட்டு தயாரிப்பாளரை நோகடித்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

சின்ன பட்ஜெட் படமாச்சே பொழச்சிப் போகட்டும் என்று கொஞ்சமும் கருணை காட்டாமல் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தை, படம் ரிலீஸான இரண்டே மணி நேரங்களில் வெளியிட்டு தயாரிப்பாளரை நோகடித்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரபு, பிரபு தேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் ஷக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் நேற்று வெளியானது ‘சார்லி சாப்ளின் 2’. இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்து பிரபுதேவாவின் அப்பா வேடத்திலும் நடித்திருந்தார். குறுகிய காலத்தயாரிப்பில் மினிமம் பட்ஜெட்டில் தயாரான இப்படத்திற்கு சரியான ஓப்பனிங் இல்லாமல் தயாரிப்பாளர், கேமரா இல்லாமலே கண்கலங்கிக் கொண்டிருந்த வேலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாகிவிட்டது.

முன்பெல்லாம் தமிழ் ராக்கர்ஸில் இப்படி படம் ரிலீஸ் தேதியன்றே லீக் ஆனால், அது ஒரு பரபரப்பான செய்தியாக இருந்து படத்துக்கு ஒரு விளம்பரமாகவும் அமையும். அந்த அதிர்ஷ்டம் கூட நம்ம ‘சார்லி சாப்ளின் 2’ வுக்கு இல்லையே என்று வேறு ஒரு தினுஷில் நொந்துபோயிருக்கிறார் அம்மா கிரியேஷன்ஸ் சிவா.