Asianet News TamilAsianet News Tamil

யுவனுக்கு மாற்றாக இவரா !! செல்வராகவன் படத்தில் இறுதி நேர மாற்றம்

செல்வராகவன் நாயனாக நடித்துள்ள சாணி காகிதம் படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Change of Sani Kagitham movie Composer
Author
Chennai, First Published Nov 7, 2021, 6:54 PM IST

துள்ளுவதோ இளமை படத்தில் எழுத்தாளராக அறிமுகமான செல்வராகவன், தனது சகோதரர் தனுஷின் காதல் கொண்டேன் படத்தை  தனது முதல் படைப்பாக உருவாக்கினார்.  இதை தொடர்ந்து 10 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள செல்வராகவன் தற்போது நாயகன் பரிமாணத்தை எடுத்துள்ளார். 'ராக்கி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். சமீபத்தில் இவர் இயக்கி முடித்துள்ள படம் 'சாணிக் காயிதம்'.

Change of Sani Kagitham movie Composer

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன்  நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 80களில் நடப்பது போன்ற கதைக் களத்தைக் கொண்டது. இதன் வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு வருடம் கழிந்துள்ள நிலையிலும் இதன் ரிலீஸ் குறித்த எந்த தகவலும் இல்லை. இதற்கிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் சாணி காகிதம் படத்தில் தனது பகுதியை முடித்து விட்டதாக படக்குழுவினருடன் தான் உள்ள புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

Change of Sani Kagitham movie Composer

இப்படத்துக்கு முதலில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. அவரது பெயரும் ஆரம்பத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றது.

இந்நிலையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள என பல மொழிகளில் கலக்கி வரும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தற்போது இசையமைப்பாளர்  இப்படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக பிரத்யேகமாக ஒரு போஸ்டரை வெளியிட்டு ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது.

Change of Sani Kagitham movie Composer

அந்த போஸ்டரை சாம் சி.எஸ் தனது ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இவர் ஆர்யா-விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான எனிமி படத்திற்கு இசையமைத்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் இப்படத்தில் இணைவது பெருமையின் உச்சம் என பதிவிட்டுள்ளார்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios