கடந்த 2005 ஆம் ஆண்டு பி வாசு அவர்கள் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் தான் சூப்பர் ஸ்டார் சந்திரமுகி திரைப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியான மணிசித்திரதாழ்வு என்ற திரைப்படத்தின் ரீமேக்காக இந்த திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுமார் 18 ஆண்டுகள் கழித்து சந்திரமுகி திரைப்படத்தின் sequelலாக சந்திரமுகி பார்ட் 2 விரைவில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது.
மேலும் வேட்டையன் ராஜாவாக நடிக்கும் ராகவா லாரன்ஸ் அவர்களுடைய First Look போஸ்டரும், சந்திரமுகியாக நடிக்கும் பிரபல நடிகை கங்கனாவின் First Look போஸ்டரும் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் முடிந்துள்ள நிலையில், தற்போது இந்த படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான "ஸ்வாகதாஞ்சலி" என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த பாடல் குறித்து வெளியாகி உள்ள சிறிய காணொளியை வைத்து சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த ரா.. ரா.. பாடலைப் போல இந்த பாடல் அமையப்பெற்றிருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரபல நடன இயக்குனர் கலா அவர்களுடைய இயக்கத்தில் வெளியான அந்த பாடலில் மிக நேர்த்தியாக ஆடி ரசிகர்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்றார் நடிகை ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜோதிகாவின் அந்த பர்பாமன்ஸுக்கு ஈடு கொடுக்கும் அளவில் கங்கனா இந்த பாடலில் ஆடி இருப்பாரா? என்பது சந்தேகமாகத்தான் உள்ளது என்று சில ரசிகர்களும், படம் வெளியாகும் பொழுது யார் சிறந்த வகையில் ஆடி இருக்கிறார் என்பது தெரியவரும் என்றும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா அன்று சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் மனோதத்துவ மருத்துவராக வந்த (சூப்பர் ஸ்டார் ரஜினி) சரவணனின், மாணவராக இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார் ராகவா லாரன்ஸ் என்று கூறப்படுகிறது.
