மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்,  இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை  நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அந்த வகையில் திரைத்துறையினர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. அதாவது அரசுக்கு சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் இனி அனுமதி வாங்க  நேரடியாக சென்று  காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும், இணையதளம் மூலம் அவர்கள் அனுமதி பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே, இதுபோன்ற முறை கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்திய திரைத்துறையில் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோல் திரையுலகினர்களை அச்சுறுத்தி வரும் வீடியோ பைரசியை போன்றவற்றை தடுக்கும் சட்டமும் இயற்றப்படும் என புதிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.