திரைப்படங்களுக்கான மத்திய அரசின் விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  

திரைப்படங்களுக்கான மத்திய அரசின் விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழில் கடந்த ஆண்டு இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான, 'ஒத்த செருப்பு' படத்திற்கும், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஹவுஸ் ஓனர் படத்திற்கும், தற்போது மத்திய அரசின் விருதுகள் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இயக்குனர்கள், சிறந்த படங்கள், போன்ற பல்வேறு பட்டியல்கள் அடிப்படையில்... மத்திய அரசு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அணைத்து மொழியிலும் சிறந்த படங்களை தேர்வு செய்து இந்த விருதை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தான் தற்போது கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் விருதுகளை இந்த இருபடங்களும் பெற்றுள்ளது.

மத்திய அரசின் விருதை பெற்றுள்ள இந்த இரு படங்களுமே, பாக்ஸ் ஆபிசில் தோல்வியை தழுவினாலும், தொடர்ந்து பல விருதுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடிகர் பார்த்திபனின் 'ஒத்த சேர்ப்பு' ஹாலிவுட் தளத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய சிறந்த படம் என பாராட்ட பட்டது குறிப்பிடத்தக்கது.