censor reject neelam movie

இயக்குனர் வெங்கடேஷ் இயக்கியுள்ள நீலம் திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சென்சார் சான்றிதழ் தர மறுத்துள்ளனர்.

மேலும் இந்தத் திரைப்படத்தில் ஈழத் தமிழர்களை பற்றியும் போராளிகளின் வாழ்க்கையைத் தழுவியும் எடுக்கப் பட்டுள்ளதால் இத்திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு சான்றிதழ் தர மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்துப் பேசிய இயக்குனர் வெங்கடேஷ் இத்திரைப்படம் எனது 5 வருட உழைப்பு, இந்த முடிவு என்னை மிகவும் பாதித்துள்ளது. இது தமிழருக்காக எடுக்கப்பட்ட படம்… எனக்கு நீதி தேவை என்று கூறியுள்ளார்.