பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பணத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கத்தோடு நேற்று இரவு 12 மணிக்கு பிறகு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என தெரிவித்தார்.

பிரதமரின் இந்த செயலுக்கு பல கோலிவுட் மற்றும் பாலிவுட்டை சேர்த்த நடிகர்கள் தங்களது ஆதரவையும், தங்களது வாழ்த்துக்களையும் ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

அதில் முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோடியின் இந்த செயலுக்கு தலை வணங்குவதாக கூறி ட்விட் செய்து அசத்தி இருந்தார்.

இதே போல் நடிகர் கமல் ஹாசன், தனுஷ், விஜய் ஆன்டனி, சித்தார்த், படலாசிரியை தாமரை, பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அனிருத், ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த், நடிகர் விக்ரம் பிரபு, சூர்யா, மற்றும் ரித்திகா சிங் என பல பிரபலங்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. 
தொடர்ந்து