சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு போட்டி போட்டுகொண்டு வாழ்த்து மழை பொழியும் பிரபலங்கள்! 

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்தநாளை ரசிகர்கள் ஆரவாரத்தோடு கொண்டாடி வருகிறார்கள். அதே நேரத்தில் பிரபலங்கள் சைலண்டாக சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

இதனால், சமூக வலைத்தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் செய்தி தான் பட்டையை கிளப்பி வருகிறது.

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபலங்களின் சில ட்விட்டுகள் இதோ...

 

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி, அதே நேரத்தில் இன்று பிறந்தநாள் கொண்டாடும், யுவராஜ் சிங்கிற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் என கூறி தலைவருக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டாருக்கு பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள ரூபிணி, இவருடைய படத்தில் இடம்பெற்ற பாடலை வெளியிட்டு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், நீங்கள் தான் என் வாழ்க்கையின் தூண் என கூறி தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

எஜமான் படத்தின் போது, முன்னணி  நடிகர் என்பதை காட்டி கொள்ளாமல் மிகவும் தாழ்மையாக நடந்து கொள்வார் என நடிகை மீனா, புதிய புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து, சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கம் சார்பாக தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறப்பட்டது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி, நீங்கள் எங்களுக்கு ஒரு நிலையான உத்வேகமாக இருக்கிறீர்கள் ... உங்களுடைய இந்த அற்புதமான பயணத்தில் ஒரு சிறிய பங்காக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என தெரிவித்துள்ளார்.

இனிய பிறந்தநாள் தலைவா என ட்விட் போட்டு வாழ்த்தியுள்ளார் தயாநிதி அழகிரி 

தொகுப்பாளினி அஞ்சனா ஹாப்பி பர்த்டே தலைவா அன்றும், இன்றும், என்றும் என கூறியுள்ளார்

நடிகை ஆர்த்தி, குருஜி என கூறி தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தலைவருக்கு தெரிவித்துள்ளார்.

இயக்குனரும் நடிகருமான வெங்கட் பிரபு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை, சூப்பர் ஸ்டாருக்கு தெரிவித்துள்ளார்.