இன்று இசைஞானி இளையராஜா, தன்னுடைய 78 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

இன்று இசைஞானி இளையராஜா, தன்னுடைய 78 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

எத்தனையோ இளம் இசையமைப்பாளர்கள் வந்தாலும், என்றுமே ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை இரவு நேர தாலாட்டு ராஜாவின் இசை தான். இவரது பாடல்களுக்கும், இசைக்கும் ஈடு இணையே இல்லை. இந்த நிலையில் இவரது பிறந்தநாளுக்கு பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்...

பத்திரிகையாளர் கவிதா இசையராசா குறித்து Skype-ல் சில வார்த்தைகள் பேச முடியுமா என்றார். SKY-ஐப் பற்றி Skype-ல் பேசித் தீருமா என்றேன். கண்ணுக்குள் கண்டுவிடும் பரப்பில்லை வானம். கண்டதையெல்லாம் ஒப்புக்கொள்வதுமில்லை நம் மனம். என் ஞானத்திற்குள் அகப்படாத பெரும்பொருள் இசைஞானி.

Scroll to load tweet…

தரை மார்க்கமாக மாநிலங்கள் கடக்கலாம், கடல் மார்க்கமாக அண்டை நாடுகள் கடக்கலாம், ஆகாய மார்க்கமாக கண்டங்கள் கடக்கலாம், ஆனால் பக்தி மார்க்கமாகவே மாய சக்திகள் உணரலாம். உணராத ஒரு சக்தியை நான் பக்தியோடு பார்க்கிறேன், அப்படியாவது அறிய முடிகிறதா என ஆராய்கிறேன். அப்படி என் ஆராதனைக்குரியவர் பெரியவர் திரு இளையராஜா அவர்கள்.

Scroll to load tweet…

(பக்தி= அகம் நோக்கி ஊர்தல்) பிறந்த பயனையே அவரின் இசையால் அடைந்தவன், பிறந்த நாளில் அவரை என்ன சொல்லி வாழ்த்த? ஆனாலும் ஏதேதோ சொல்ல முற்பட்டேனே... அதுதான் அறியாமை என்பது’ என்று பதிவு செய்துள்ளார்.

Scroll to load tweet…

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது... "இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர்.உணர்வுகளில் உறவாய் இருப்பவர்.சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இவரை தொடர்ந்து, பிரபல இயக்குனர்... பாரதி ராஜா...."அந்தவகையில் இசைஞானியின் பிறந்தநாளுக்கு இயக்குனர் பாரதிராஜா டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். அவரை பதிவிட்டிருப்பதாவது,
"உனக்கும்,
உன் இசைக்கும்,
நம் உறவுக்கும்,
என்றும் வயதில்லை
வாழ்த்துக்கள்டா. #Ilaiyaraaja

உயிர்த் தோழன்
பாரதிராஜா." என்று பதிவிட்டுள்ளார்".

Scroll to load tweet…

பிரபல பாடகி சித்ரா... டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இசைஞானிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து, நீங்கள் எனக்கு ஒரு குருவாக, அப்பாவாக இருந்து அறிவுரை கூறி என்னை வழிநடத்தினீர்கள். உங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. இந்த கோவிட் பிரச்சனை காரணமாக ஒருத்தரை ஒருத்தர் பார்க்க முடியவில்லை. இந்த தருணத்தில் கடவுள் உங்களுக்கு நல்ல தீர்க்காயுசு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

இன்னும் 100 வருஷம் உங்களுடைய இசை பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். என கூறி 'வந்ததே குங்குமம்' என்று தொடங்கும் பாடல் பாடியுள்ளார். இன்னும் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Scroll to load tweet…