Celebrities Speak about Superstar Rajinikanth
பாலிவுட் பாஷாக்களுக்கு எப்பவுமே தலைக்கனம் ஜாஸ்தி. என்னமோ இந்திய சினிமான்னாலே அது ‘இந்தி சினிமா’தான் அப்படின்னு நினைக்கிற கொலஸ்ட்ரால் நிறைஞ்ச கூட்டம் அது. ஆனா அந்த பச்சன்களும், கான்களுமே மெர்சலாக நோக்குகிற ஒரு நடிகரென்றால் அது ரஜினிதான்.
அப்பேர்ப்பட்ட ரஜினிகாந்தை பற்றி நாமளே பேசிட்டு இருக்கிறதைவிட, செலிபிரெட்டிகள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்...

ஒரு சூப்பர் ஸ்டாரை வெச்சு படம் எடுக்கிறேங்கிற பயமே எனக்கு இருந்ததில்லை. காரணம், அவரோட எளிமை. ஒரு தடவை அரிசி மண்டியில ஷூட்டிங். பிரேக்ல இவரை ஆளை காணோம். எங்கேன்னு பார்த்தா அரிசி மூட்டைங்களுக்கு மேலே படுத்து தூங்கிட்டு இருந்தார். எந்திருச்சி வந்ததும், அந்த மூட்டைங்கள்ள படுத்தா அரிக்குமே, குத்துமே!ன்னு கேட்டதும் ‘இல்ல சார், இந்த ஃபீல்டுக்கு வர்றதுக்கு முன்னாடி கூலியா வேலை பார்த்திருக்கேன். அப்பல்லாம் இப்படி நிறைய தடவை தூங்கியிருக்கேன்.’ அப்படின்னார். பணக்காரன் ஆன பிறகும் எளிமையா வாழ்றது ரொம்ப கஷ்டம் - எஸ்.பி. முத்துராமன்.
.jpg)
கமிட் ஆயிட்டார்னா மெஷினாட்டமா உழைப்பார். எங்க ரெண்டு பேரையும் போட்டியாளர்கள்னு நிறைய பேர் சொல்லுவாங்க. அப்படி இல்ல. என் ரூட் வேற, அவரோட ரூட் வேற. எனக்கு ஷூட் இல்லாத சமயத்துல குழந்தைங்களை கூட்டிட்டு ஊர் சுத்துவேன், அப்போ போயஸ் பக்கம் போனா அவசரத்துக்கு ரஜினியோட வீட்டு முன்னாடியே ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும். கேட்டால், ‘இப்போ இதை முடிச்சுட்டு ஈவ்னிங்குக்கு மேலே ஆந்திரா போகணும்.’ அப்படிம்பார்.
- கமல் ஹாசன்.
.jpg)
தனக்காக பின்னணி பாடிய பாடகருக்கு ரொம்ப அழகா நியாயம் செய்யக்கூடிய மனிதர் ரஜினி. நான் பொதுவா மாஸ் ஹீரோக்களுக்கு பாடுறப்ப முதல் சரணம் முடிஞ்ச பிறகு கொஞ்சம் விளையாட ஆரம்பிப்பேன். சிரிக்குறது, சின்னதா சப்தம் கொடுக்குறதுன்னு பண்ணியிருப்பேன். பாடல் ஷூட்டிங்ல அதை தெளிவா கவனிச்சு நான் கொடுக்குற சவுண்டுக்கு ஏற்ற மாதிரி ஒரு குறும்பு பண்ணி நியாயம் செய்திருப்பார் ரஜினி சார். - எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
சினிமாவுல நான் அவனுக்கு குருதான். ஆனா ஆன்மீகத்துல சந்தேகம் வந்தப்பல்லாம் பல நேரங்கள்ள அவன் தான் என்னோட குரு - கே.பாலசந்தர்.
.jpg)
ரஜினி சாரோட ஸ்டைலான ’நடை’க்கு நான் பெரிய விசிறி. அதை ஸ்பாட்ல கூட இருந்து பார்த்து ரசிச்சிருக்கேன். அதைத்தான் கேளடி கண்மணியில ’மண்ணில் இந்த காதலன்றி’ பாட்டுல பண்ணியிருப்பேன். - ராதிகா.
எனக்கு ரொம்ப பிடிச்ச தமிழ்ப்படம் சிவாஜி! ஒரு பத்து பதினைஞ்சு தடவை பார்த்திருப்பேன்!
- இலங்கை கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன்
.jpg)
அவரோட சக்ஸஸோட சீக்ரெட்டே எளிமை, தன்னடக்கம்தான். படையப்பா ஷுட்டிங் நேரம். சிவாஜி சார் செட்ல இருந்தார். எனக்கோ தம் அடிக்கணும்னு ஆசை. அப்படியே ஒரு செட் பிராப்பர்ட்டிக்கு பின்னாடி போயி நின்னு பத்த வைக்கிறேன். கூர்ந்து பார்த்தா அங்கே இருட்டுல இன்னொரு உருவம் நின்னு தம் அடிச்சுட்டு இருக்குது. ‘யாரு அது’ன்னு கேட்டதும் ‘ரவி நான் தான். சிவாஜி சார் முன்னாடி அடிக்க கூடாதுன்னு இப்படி வந்து அடிக்கிறேன்.’ன்னு ரஜினி சார் சொன்னார். சிலிர்த்துப் போயிட்டேன்.
- கே.எஸ்.ரவிக்குமார்.
.jpg)
பாட்ஷா இவ்வளவு பெரிய ஹிட் ஆகியது, இந்திய சினிமாவுல கவனிக்கத்தக்க மூவி ஆனதுக்கும் ஒரே காரணம் ரஜினி சாரோட டெடிகேஷன் தான். ஒவ்வொரு ஃபிரேமையும் ரசிச்சு, ரசிச்சு பண்ணினான். குறிப்பா மாணிக் பாட்ஷா சீன் எடுக்குறப்பவெல்லாம் அவர் செட்ல கூட சிரிச்சு பேசியதில்லை. அந்த இறுக்கத்தை, வெறியை உடம்புல வெச்சிட்டேஇருப்பார் - சுரேஷ் கிருஷ்ணா
.jpg)
நிறைய தென்னிந்திய வீரர்கள் டீம்-க்கு வருவாங்க. அவங்க எல்லாருக்குமே இன்ஸ்பிரேஷன் யாருன்னு பார்த்தா ரஜினி சாராகாத்தான் இருக்கும். ஹி இஸ் ரியலி வொண்டர்ஃபுல் - சச்சின் டெண்டுல்கர்.
யெஸ்! நான் ரஜினி சாரோட பிக் ஃபேன் தான். அவரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் - இலங்கை கிரிக்கெட்டர் ஜெய்சூர்யா
.jpg)
என்னை என்னோட வீட்டுல செல்லமா ‘நார்த் இண்டியன் ரஜினி காந்த்’ அப்படின்னு சொல்லுவாங்க. இது ஹேப்பிதான். ஆனா அந்த ஸ்டேஜை அடைய நான் இன்னமும் நிறைய போக வேண்டியிருக்குது.
- சல்மான் கான்.
