'கர்ணன்' திரைப்படம் நேற்று ரிலீசாகி,  அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், பிரபல நடிகர் விஜய் சேதுபதியும் புகழ்ந்து இந்த படத்தை விமர்சனம் செய்துள்ளார். 

'கர்ணன்' திரைப்படம் நேற்று ரிலீசாகி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், பிரபல நடிகர் விஜய் சேதுபதியும் புகழ்ந்து இந்த படத்தை விமர்சனம் செய்துள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் 'கர்ணன்'. ஏப்ரல் 9ஆம் தேதி , நேற்று வெளியானது. தற்போது கொரோனா தன்னுடைய இரண்டாவது அலையை துவங்கியுள்ளதால், தமிழக அரசு தேர்தல் முடிந்த கையேடு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும் என கூறியுள்ளது.

எனவே கர்ணன் படத்திற்கு அதிக அளவு எதிர்பார்ப்புகள் இருந்தாலும் 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்க படுகிறார்கள். மேலும் தொடர்ந்து பிரபலங்கள் வியர்ந்து பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர், தனுஷை போலவே தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும், விஜய் சேதுபதி... "எக்ஸலண்ட் மூவி... டோன்ட் மிஸ் இட் ' என கூறியுள்ளார். 

Scroll to load tweet…

இவரை தொடர்ந்து, தனுஷுடன் பல படங்களில் நடித்துள்ள விவேக் "எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி புரோ" என் தன்னுடைய வாழ்த்துக்களை கர்ணன் பட குழுவினருக்கு தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…

முன்னாள் சென்னை மேயர் மா சுப்ரமணியம், தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'கர்ணன்' படத்திற்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள தன்னுடைய பதிவில், "பரியேறும் பெருமாளில் "பாமர மக்களின் விடுதலை உணர்ச்சியைப் படைத்தவர் 'கரியேறும் கர்ணனில் " இன்னும் அதை கம்பீரமாய் வடித்திருக்கிறார். தடுக்கப்பட்டவரின் உரிமைகளுக்கு தாளேந்திய மாரி செல்வராஜ் வாளேந்தியும் வென்றிருக்கிறார்... வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் சுமார் 10 கோடி வரை கர்ணன் படம் வசூல் சாதனை செய்துள்ளது. அதே போல்... சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 90 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.