cauvery water is rights to tamil people...vishal speech
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால், தங்களுக்குரிய காவிரி நீரை கேட்பது தமிழர்களின் உரிமை என்றும், தண்ணீர் கேட்கக் கூடாது என கூற யாருக்கும் உரிமை இல்லை என்றும் அதிரடியாக பேசினார்
ரகுவீரா என்ற கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு சென்ற நடிகர் விஷால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி விழா மேடைக்கு தாமதமாக வந்து சேர்ந்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய விஷால், கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவானாலும், தமிழில் பேசுவதில் பெருமை அடைகிறேன் என கூறி தமிழிலிலேயே பேசினார். காவிரியில் தண்ணீர் கேட்பது, தமிழர்களுடைய உரிமை என்றும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை மனதில் வைத்து மாநில பேதம் பார்க்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

காவிரி நீர் என்பது கர்நாடகாவுக்கு மட்டுமே சொந்தம் கிடையாது அதில் எங்களுக்கும் உரிமை இருப்பதாலேயே கேட்கிறோம் என்று பேசிய விஷால் தண்ணீர் கேட்க கூடாது என்று சொல்ல, யாருக்கும் உரிமையில்லை என்றார்.
கர்நாடகாவிலிருந்து யார் வந்து, தமிழகத்தில் படம் எடுத்தாலும், தயாரிப்பாளர் சங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் விஷால் தெரிவித்தார்.
