Asianet News TamilAsianet News Tamil

பல்லாயிரம் கோடி மோசடிக்கு முற்றுப்புள்ளி...ஜக்கி மரக்கன்றுக்கு ரூ.42 வசூலிக்க மூன்று வாரங்களுக்குத் தடை...

சுமார் 256 கோடி மரக்கன்றுகளை நடும் ஒரு புதுவிதமான யுக்தியுடன் ஜக்கி வாசுதேவ் ‘காவேரி காலிங்’என்ற பெயரில் கூக்குரல் இட்டிருந்தார். இந்த பிரச்சாரத்துக்காக பெருமளவில் நடிகர்,நடிகைகளைத் திரட்டி போஸ் கொடுத்த அவர், அடுத்து தமிழக முதல்வர் உட்பட  சகல கட்சி அரசியல்வாதிகளையும் அரவணைத்துக்கொண்டார். 

cauvery calling collection te be stopped for 3 weeks
Author
Chennai, First Published Sep 18, 2019, 3:52 PM IST

தன்னை சத்குரு என்று அழைத்துக்கொள்ளும் சத்துரு ஜக்கி வாசுதேவ் ‘காவேரி காலிங்’நிகழ்ச்சியின் மூலம், மரக்கன்றுகளை நடுவதாகக்கூறி  10 ஆயிரத்து 626 கோடி ரூபாயை பொதுமக்களிடமிருந்து  வசூலிக்கத்திட்டமிட்டிருக்கிறார். ஒரு தனியார் நிறுவனத்துக்கு இதற்கான அனுமதியை எப்படி வழங்கலாம்? என்று கர்நாடக உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு  கேள்வி எழுப்பியுள்ளது. இதே மனுவுக்கு மூன்று வாரத்தில் முறையான பதில் அளிக்கும்படி  ஜக்கி வாசுதேவுக்கும் அவரது ஈஷா மய்யத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.cauvery calling collection te be stopped for 3 weeks

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சுமார் 256 கோடி மரக்கன்றுகளை நடும் ஒரு புதுவிதமான யுக்தியுடன் ஜக்கி வாசுதேவ் ‘காவேரி காலிங்’என்ற பெயரில் கூக்குரல் இட்டிருந்தார். இந்த பிரச்சாரத்துக்காக பெருமளவில் நடிகர்,நடிகைகளைத் திரட்டி போஸ் கொடுத்த அவர், அடுத்து தமிழக முதல்வர் உட்பட  சகல கட்சி அரசியல்வாதிகளையும் அரவணைத்துக்கொண்டார். அவரை முதல்வர் எடப்பாடி உள்ளிட்டவர்களே ’நம்காலத்தில் வாழும் மாமுனி’ என்று உச்சி முகர்ந்தனர். இந்தக் கூட்டத்தில் கமலும் சேர்ந்துகொண்டு கூத்தடித்தது தனிக்கதை.cauvery calling collection te be stopped for 3 weeks

இந்நிலையில் இந்த காவேரி காலிங் என்பது மாபெரும் மோசடி என்றும் ஒரு மரக்கன்றை நடுவதற்கு பொது மக்களிடமிருந்து ரூ 42 ஐ நிதியாக எதிர்பார்ப்பதன் மூலம் ஜக்கி ரூ 10 ஆயிரத்து 626 கோடியை வசூலிக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்றும் திம்மக்கா போன்ற ஏழை ஜனங்களே தங்கள் சொந்தப் பணத்தில் மரக்கன்றுகளை நடும்போது ஜக்கி அவ்வளவு பெரிய நிதியைத் திரட்ட அனுமதிக்கப்பட்டது எப்படி என்றும் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.வி.அமரநாதன் என்ற வழக்கறிஞர்  பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். 

இரு மாநில அரசுகளுக்குச் சொந்தமான நிலத்தில் மரக்கன்றுகளை நடுவதற்கு அவர் யார்? இதே காரியத்தை அரசாங்கமே செய்யலாமே? என்ற கேள்விகளை பொதுமக்களும் எழுப்ப இன்னும் சிலரோ, மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் சொல்லை மதித்து 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட நடிகர் விவேக் பொதுமக்களிடம் ஒரு பைசா கூட வாங்காமல் செய்யவில்லையா? என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த மரக்கன்று வசூலில் உள்குத்து எதுவும் இல்லையென்றால் நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களை அழைத்து ஜக்கி ஆடம்பர விளம்பரம் செய்யவேண்டிய அவசியமென்ன என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.cauvery calling collection te be stopped for 3 weeks

இதுபோன்ற பொதுமக்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுடன்  வழக்கறிஞர் அமரநாதன் தொடர்ந்திருந்த வழக்கு, தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ், மற்றும் நீதிபதி முகம்மது நிவாஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று  விசாரணைக்கு வந்த நிலையில் ஜக்கியின் மரக்கன்று வசூல் மீது உடனடியாக விசாரணை நடத்தும்படியும், இதற்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படியும் கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதே நோட்டீஸ் ஜக்கி வாசுதேவுக்கும் அவரது ஈஷா மய்யத்துக்கும் அனுப்பபட்டுள்ளது. ஸோ மூன்று வாரத்துக்கு 42 ரூபாய் வசூல் கொள்ளையில் ஜக்கி ஈடுபடமுடியாது.

Follow Us:
Download App:
  • android
  • ios