ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகம் ஆனவர் நடிகை கேத்தரின் தெரேசா, இதை தொடர்ந்து கணிதன், கதகளி போன்ற சில படங்களின் மட்டுமே நடித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றும், தமிழில் இவருக்கு சரி வர வாய்ப்புகள் கிடைக்கவில்லை, இதனால் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கேத்தரின் தெரேசா.

இந்நிலையில் விஜய் நடித்து சர்ச்சைகளுக்கு இடையில் வெற்றி பெற்ற, கத்தி படத்தின் ரீமேக் ஆகா டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் கைதி எண் 150 படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட போகிறாராம் கேத்தரின் தெரேசா.

இந்த பாடலின் பட பிடிப்பு அக்டோபர் 13ம் தேதி நடக்க இருப்பதாக சொல்ல படுகிறது, இந்த படத்தில் சிரஞ்சீவிக்குந் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார், இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சாரம் தயாரிக்கிறார்.