Asianet News TamilAsianet News Tamil

#BREAKING 100 சதவீத இருக்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு... நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு தாக்கல்...!

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.

Case Madurai High court receive petition against to 100 percentage occupancy in theatres
Author
Chennai, First Published Jan 7, 2021, 11:40 AM IST

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் கடந்த 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தொற்று பீதி காரணமாக தியேட்டர்களில் பார்வையாளர்களின் வருகை கணிசமாக குறைந்தே காணப்பட்டது. தற்போது தமிழகத்தில் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. 

Case Madurai High court receive petition against to 100 percentage occupancy in theatres

தமிழக அரசிடம் தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும்  நடிகர்கள் விஜய், சிம்பு உட்பட திரையுலகினர் பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருத்தார். இதற்கு திரையுலகினர் பலரும் நன்றி தெரிவித்த போதும், மூடப்பட அறைக்குள் கொரோனா வேகமாக பரவும் என்பதால் அனுமதி ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 

Case Madurai High court receive petition against to 100 percentage occupancy in theatres

இந்நிலையில் நேற்று கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும் தமிழகத்தில் தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை திரும்ப பெற வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. தற்போது தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

Case Madurai High court receive petition against to 100 percentage occupancy in theatres

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்படலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என தெரியவந்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios