case filed on high court against kamal

மகாபாரதத்தை இழிவு படுத்தி பேசியதாக கூறி, நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குக்கான மனு தாக்கல் செய்யப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நெல்லை மாவட்டம், வளவூரை சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கமல், மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசிய கமல் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.