பாடலாசிரியர், நடிகர், என தமிழ் திரையுலகில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட பிரபலம் சினேகன். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டதன் மூலம் இவர் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இந்நிலையில் இவர் ஏற்படுத்திய விபத்தால் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்ததை அடுத்து போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினேகன் நவம்பர் 15 ஆம் தேதி, தன்னுடைய காரில்... புதுகோட்டை மாவட்டம் திருமயம் என்கிற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்து கொண்டிருந்த, அருண் பாண்டியன் என்கிற நபர் மீது பலமாக இடித்துள்ளார்.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த நபருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் இவர் சென்னை ராஜு காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அருண் பாண்டியன் சிகிச்சை பலன் ... நேற்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

எனவே தற்போது போலீசார் சினேகன் மீது, செக்ஷன் 304A பிரிவின் படி, அலட்சியமாக வண்டி ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, செக்ஷன் 279 பிரிவின் படி அதிவேகமாக கார் ஓட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.