Asianet News TamilAsianet News Tamil

சாதி குறித்த சர்ச்சை பேச்சுக்கு சரியான ஆப்பு... விரைவில் கைதாகிறாரா மீரா மிதுன்?

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Case against meera mithun under seven sections may be arrested
Author
Chennai, First Published Aug 8, 2021, 3:01 PM IST

சோசியல் மீடியாவில் பப்ளிசிட்டி தேடுவதற்காக சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருபர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் ஆரம்பித்து என் மூஞ்சியை எல்லா நடிகைகளும் திருடிட்டாங்க என பீதி கிளப்பியது வரை மீரா மிதுனின் பப்ளிசிட்டி அலப்பறைகள் அளவில்லாதது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யாவைப் பற்றியும், அவர்களது மனைவியான சங்கீதா, ஜோதிகா பற்றியும் மிகவும் தரக்குறைவாக பேசி மீரா மிதுன் வீடியோ வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. 

Case against meera mithun under seven sections may be arrested

இந்த விவகாரத்தில் ரசிகர்களைக் கடந்து சோசியல் மீடியாவில் திரையுலகினர் பலரும் கூட கடுமையான விமர்சனங்களை மீரா மிதுன் மீது முன்வைத்தனர். இன்ஸ்டாகிராமில் ஆடையில்லாமல் புகைப்படங்களை பதிவிடுவது, யூ-டியூப்பில் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை பற்றி ஆபாசமாக பேசி வீடியோ வெளியிடுவது என சுற்றி வந்த மீரா மிதுன், சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. 

Case against meera mithun under seven sections may be arrested

கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை மிகவும் அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மீரா மிதுனின் இப்பதிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில் புரட்சி பாரதம் கட்சியினர் சார்பில் நடிகை மீரா மிதுன் மீது சென்னை, திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சார்பிலும் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Case against meera mithun under seven sections may be arrested

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 32/2021 U/s 153,153A(1) (a),505 (1) (b),505 (2) IPC and section 3(1) (r),3(1)(s), (3)(1) (u) of sc &ST Prevention Act 1989-ன் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் படி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணையை ஆரம்பிக்க உள்ள நிலையில், மீரா மிதுனை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios