Asianet News TamilAsianet News Tamil

மகன் மீதான கார் விபத்து வழக்கு! போலீசுடன் நடிகர் விக்ரம் செய்து கொண்ட டீல்!

கடந்த மாதம் சென்னையில் நடிகர் விக்ரம் மகன் ஓட்டி வந்த கார் ஏற்படுத்திய வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் அந்த வழக்கில் மகன் ஜாமீனில் விடுவிக்கப்பட நடிகர் விக்ரம் போலீசாருடன் செய்து கொண்ட டீல் வெளியாகியுள்ளது.

Car of actor Vikram son crashes case... Deal with Police
Author
Chennai, First Published Sep 23, 2018, 10:50 AM IST

கடந்த மாதம் சென்னையில் நடிகர் விக்ரம் மகன் ஓட்டி வந்த கார் ஏற்படுத்திய வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் அந்த வழக்கில் மகன் ஜாமீனில் விடுவிக்கப்பட நடிகர் விக்ரம் போலீசாருடன் செய்து கொண்ட டீல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12ந் தேதி அதிகாலை தேனாம்பேட்டை அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று அங்கிருந்த ஆட்டோக்கள் மீது பயங்கர வேகத்தில் மோதியது. Car of actor Vikram son crashes case... Deal with Police

அதிகாலை நேரம் என்பதால் ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் சாலை ஓரத்தில் படுத்து இருந்த காரணத்தினால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இருப்பினும் மூன்று ஆட்டோக்கள் சேதம் அடைந்தன. ஒரே ஒரு ஆட்டம் ஓட்டுனர் மட்டும் படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு காரில் இருந்த மூன்று பேர் தப்பி ஓடினர்.

ஆனால் விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகே காவல் ஆணையர் விஸ்வநாதன் வீடு உள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் விரைந்து செயல்பட்டு தப்பி ஓடிய மூன்று பேரையும் பிடித்தனர். அவர்களில் ஒருவர் பெயர் துருவ் என்பதும் நடிகர் விக்ரமின் மகன் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட துருவ் கைது செய்யப்பட்டார். Car of actor Vikram son crashes case... Deal with Police

மூன்று ஆட்டோக்கள் சேதம் அடைந்த நிலையிலும், ஒருவர் காயம் அடைந்த நிலையிலும் துருவ் சிக்கியதால் கைது செய்யப்பட்ட துருவை ரிமான்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் காவல்நிலையத்தை சிறிது நேரத்தில் தொடர்பு கொண்ட காவல் உயர் அதிகாரி ஒருவர், துருவை ஜாமீனில் விடுவித்துவிடும்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்தே துருவ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கடந்த 17ந் தேதி சென்னையில் சி.சி.டி.வி தொடர்பான குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டது. Car of actor Vikram son crashes case... Deal with Police

அந்த குறும்படத்தில் நடிகர் விக்ரம் நடித்துக் கொடுத்திருந்தார். கடந்த மாதம் அவரது மகன் கார் விபத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை ஆன நிலையில் போலீசுக்காக விக்ரம் குறும்படத்தில் நடித்து கொடுத்த நிகழ்வுடன் அது முடிச்சி போடப்பட்டது. சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னை நகர் முழுவதையும் சி.சி.டி.வி கேமரா வளையத்திற்குள் கொண்டு வரும் முயற்சியுடன் செயல்பட்டு வருகிறார்.

கடந்த மாதம் நடிகர் விவேக்கை வைத்து குறும்படம் ஒன்றை விஸ்வநாதன் வெளியிட்டார். அதற்கு பெரிய அளவில்  வரவேற்பு இல்லை. இந்த நிலையில் தான் முன்னணி ஹீரோவான விக்ரம் நடிப்பில் சி.சி.டி.வி கேமரா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்துள்ளார். மேலும், விக்ரம் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போது உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட விக்ரம் தான் என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

 Car of actor Vikram son crashes case... Deal with Police

இந்த தகவலை அறிந்த ஏ.கே.விஸ்வநாதன், அப்படி என்றால் சி.சி.டி.வி விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில் நடித்து தரும்படி விக்ரமை கேளுங்கள் என்று கூறியுள்ளார். இதனை ஏற்றே விக்ரம் தனது சொந்த செலவில் உடனடியாக ஒரு குறும்படத்தில் நடித்து கொடுத்துள்ளார். வழக்கமாக ஒருவரை விடுதலை செய்ய பணம் பெறும் அதிகாரிகளுக்கு மத்தியில் போலீசாருக்கும், மக்களுக்கும் பயன்பெறும் வகையில் விக்ரமுடன் டீல் பேசியிருப்பது புதிய வகை டீல் என்று பேசப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios