பிரபல கார் நிறுவனத்தின் டிரைவர் நடிகையை, கீழே தூக்கி போட்டுவிட்டு, சென்றதாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில், கொல்கத்தாவை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஸ்வஸ்திகா தத்தா, படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனியார் நிறுவனத்தை சேர்ந்த காரை புக் செய்துள்ளார்.

குறிப்பிட்ட இடம் வருவதற்கு முன்பே திடீர் என காரை நிறுத்திய டிரைவர், தனக்கு வேறு ஒரு முக்கியமான சவாரி உள்ளது அதனால் காரில் இருந்து இறங்குமாறு நடிகையிடம் கூறியுள்ளார். ஆனால் நடிகையோ தன்னை படப்பிடிப்பு தளத்தில் விட்டு விட்டு அடுத்த சவாரிக்கு செல் என மிகவும் கோபமாக கார் டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே சண்டை முத்திய  நிலையில், கார் டிரைவர் ஆத்திரத்தில் நடிகையை காரில் இருந்து குண்டுகட்டாக தூக்கி நடுரோட்டில் வீசி எறிந்துவிட்டு காரை எடுத்து கொண்டு அந்த இடத்தில் இருந்து சென்றார்.

இதையடுத்து நடிகை ஸ்வஸ்திகா, தன்னை கீழே தூக்கி வீசி சென்ற டிரைவர் மீது போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், கார் ஓட்டுனரை தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து நடிகை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.