'கேப்டன் மில்லர்' டீசர் ரிலீஸ் விஷயத்தில் கங்குவாவை காப்பியடித்த படக்குழு! வெளியான தேதி மற்றும் நேரம்!
தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில், தொடர்ந்து வித்யாசமான கதைகளையும், கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் தனுஷ், தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தமிழில் 'சாணி காகிதம்' மற்றும் 'ராக்கி' ஆகிய படங்களை இயக்கிய, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். பீரியாடிக் கதை அம்சம் கொண்ட இந்த படத்தை, மிகப்பிரமாண்டமாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்துள்ளார். இவரை தொடர்ந்து ஜான் கோகென், நிவேதிதாசத்தீஷ், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படபிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் தனுஷ் ஒரு போராளியாக நடிப்பது இந்த ஃபர்ஸ்ட் லுக் மூலம் தெரிய வந்தது.
சீரியல் வரலாற்றிலேயே முதல் முறையாக... எதிர்நீச்சல் தொடரில் ஹிஜாப்புடன் நடிக்கும் முஸ்லிம் நடிகை!
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கேப்டன் மில்லர் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு 12:01க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான கங்குவா படத்தின் கிலிம்ஸி காட்சியும், நள்ளிரவு வெளியான நிலையில், கங்குவாவை பார்த்து இந்த விஷயம் காப்பி அடிக்கப்பட்டுள்ளதா? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.