cant able to do film like baahubali
பாகுபலி-2 மாதிரி ஒரு படம் பண்ணுப்பா என்று கேட்ட மகனுக்கு அப்பாவால் பாகுபலி-2 மாதிரி படம் இயக்க முடியாது. ஆனால், கண்டிப்பா ட்ரை பண்றேன்ப்பா'என்று இயக்குனர் வசந்தபாலன் தனது மகனுக்கு பதில் அளித்துள்ளார்.
தற்போது எங்கு பார்த்தாலும் பாகுபலி-2 வை பற்றிய பேச்சு தான். இப்படத்தைப் பற்றி பேசாதவரே இருக்க முடியாது. அந்த அளவிற்கு புகழ் பெற்றுவிட்டது பாகுபலி-2.

ஹாலிவுட் படத்தின் பிரமாண்டத்தை அசரவைத்துள்ளது இந்தப்படம், ஒரு தென்னிந்தியப்படம் உலகம் முழுவதும் வசூலில் பின்னியெடுப்பதை பெருமைப்படும் விதத்தில் பாக்ஸ் ஆபிசில் முந்தைய வசூல் சாதனையை வீழ்த்தி புதிய சாதனையை எழுதியுள்ளது.
தமிழ் சினிமாவின் முதல் நாள் வசூலில் இப்படம் பல சாதனைகளை முறியடிக்க தவறிய இப்படம், எந்திரன் ஒட்டு மொத்த வசூல் சாதனையை முறியடித்துவிட்டது.பல திரையரங்குகளில் இப்படம் தான் அதிக வசூலை தந்துள்ளதாக அவர்களே வெளியிட்டுள்ளனர்.

