MaanaaduRelease | அனைத்து திரையரங்குகளிலும் மாநாடு திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  காலை முதல் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்படத்தை முதலில் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டனர். அப்போது ரஜினியின் அண்ணாத்த படம் ரிலீசான காரணத்தால், நவம்பர் 25-ந் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். இதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தன.

இதற்கிடையே நேற்று மாலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, டுவிட்டரில் தீடீர் அறிவிப்பி ஒன்றை வெளியிட்டார். அதன்படி மாநாடு படத்தின் ரிலீஸ் தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் ஷாக்கான ரசிகர்கள், எப்படியாவது திட்டமிட்டபடி படத்தை வெளியிடுமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

பின்னர் தயாரிப்பாளர் - பைனான்சியர் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனை இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டர் மூலம் உறுதிப்படுத்தி இருந்தார். 

இதை தொடர்ந்து டிக்கெட் புக்கிங் சூடு பிடித்தது. மாநாடு திரைப்படம் இன்று காலை 5 மணிக்கு சிறப்பு காட்சியுடன் வெளியாக இருந்தது. ஆனால் லைசென்ஸ் விநியோகத்தில் உள்ள சிக்கல் காரணமாக அதிகாலை காட்சிகள் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் அனைத்து திரையரங்குகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிகாலை முதல் திரையரங்கில் காத்திருந்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.