ஆபாசமும், அறுவருப்பும், அக்கிரமுமான காட்சிகளை கொண்ட இரண்டாம் குத்து  டீசருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அரசியல்வாதிகள் கொந்தளிக்கிறார்கள். சினிமா துறையினரே சீற்றம் கொள்கிறார்கள். வசனங்கள் வயிறெரிய வைக்கிறது.  காட்சிகளை காண கண் கூசுகின்றன. படத்தை வெளியிடக்கூடாது என அமைச்சர் கடம்பூர் ராஜூவையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் கோரிக்கைகள் குவிந்து வருகின்றன.

இது குடிக்கதை இல்லை பல குட்டிகளை போட்டவனின் கதை... நடுசாம பேயை பார்த்திருக்கிறேன் இது படு காம பேயாக இருக்கே போன்ற வசனங்களோடு எழுத்தில் வடிக்கவே முடியாத வசனங்களால் மக்கள் கடுப்பாகி கிடக்கின்றனர்.

இரண்டாம் குத்து இயக்குநர் ஒருவேளை ரெட் லைட் மாமாவாக பல நாள் இருந்திருப்பானோ? ஐயா இது போன்ற திரைப்படங்கள் தமிழ். கலாச்சார சீரழிவை உண்டாக்கும்.ஏற்கனவே நம் இளைய சமூகம் பல கலாச்சாரம் சீரழிவை கண்டுவருகிறது. இது போன்ற படங்கள் தமிழ் நாகரீகத்தை குழி தோண்டி புதைத்து விடும். திரையிட அனுமதி மறுப்பீர்.  

காட்சி ஊடகங்களின் வரம்பு மீறிய ஆபாச வக்கிர சித்தரிப்புகளால்தான் பாலியல் குற்றங்கள், அதுவும் குறிப்பாக இளஞ்சிறார்கள் செய்யும் பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் பெருகி வருகின்றன. காட்சி ஊடக படைப்பாளிகள் கருத்துரிமை படைப்புரிமை தங்களுக்கு உண்டு என வீம்பு பேசிக் கொண்டு, பொறுப்பற்ற ஆபாச வக்கிர படைப்புகளை தங்களின் பொருளாதார பெருக்கத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு காட்சிப்படுத்துகிறார்கள். பாதிப்பு தங்களுக்கோ தங்கள் குடும்ப அங்கத்தினருக்கோ நேரும் போதுதான் அவர்கள் விதைத்த அநாகரீகங்களின் விளைவுகள் அவர்களுக்கு புரியும். 

சமூகப் பொறுப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும், அதுதான் ஒழுக்கமான நல்ல சமூகத்தை உருவாக்கும்’’ என கொந்தளிக்கின்றனர். உனக்கு அக்கா தங்கச்சி பொண்ணு ல இருந்த பக்கத்துல ஒக்கரா வச்சி படத்தை பார் என எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.