Can Baahubali The Conclusion get 1000 crore

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 28-ந் தேதி வெளிவந்த இந்த படம் 3 நாட்களில் ரூ.500 கோடியை வசூலித்து சரித்திர சாதனை படைத்தது. இந்திய திரையுலகின் பல்வேறு சரித்திர சாதனைகளை ‘பாகுபலி-2’ படம் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது. 

விரைவில் ரூ.1000 கோடியை அள்ளும் என்ற கணிப்பில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரொம்ப நாட்களுக்கு பிறகு திரையரங்கங்களுக்கு அலை மோதிக்கொண்டு மக்கள் கூட்டம் வருகிறதென்றால் அது பாகுபலிக்குத்தான். 

இந்நிலையில் இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ. 860 கோடி வரை வசூலித்துள்ளது. பாலிவுட் படங்கள் கூட முதல் வார முடிவில் இவ்வளவு வசூல் செய்தது கிடையாது. 

பாக்ஸ் ஆபிஸில் தனி சாதனையை நடத்திவரும் இப்படம் இன்னும் நிறைய வசூல் சாதனை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படம் எனும் பெருமையை பாகுபலி அடைந்துள்ளது. இந்நிலையில் இன்று இப்படம் இந்திய சினிமாவின் முதல் 1000 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.