நடுவில் கொஞ்சம் ஸ்லிம்மாக மாறிய அனுஷ்காவின் குண்டுத் தோற்றம் ஒன்று வலைதளங்களில் வைரலானதால், ரசிகர்கள் மத்தியில் அதற்கு கடுமையான கண்டனங்கள் கிளம்பி வருகின்றன. குண்டாக இருந்தால் உங்களுக்குப் பட வாய்ப்புகள் வராது. எனவே நீங்கள் மறுபடியும் ஸ்லிம்மாக வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகியோருடன் நடித்துள்ளார். அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அனுஷ்காவின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தின.

கடைசியாக அனுஷ்கா நடிப்பில் ’பாகமதி’ படம் வந்தது. அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லை. உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருந்ததால் அனுஷ்காவை இரு  மொழிகளிலுமே  ஒதுக்கினர். இதனால் கடும் உடற்பயிற்சிகள் செய்து எடை குறைந்து ஒல்லியான தோற்றத்துடன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.அதன்பிறகு ’நிசப்தம்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். 4 இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம் என்று அனுஷ்கா கூறி இருந்தார். இந்த நிலையில் அனுஷ்கா ஐதராபாத் விமான நிலையத்துக்கு வந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மீண்டும் உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருக்கிறார். உடற்பயிற்சிகளால் எடையை குறைக்க முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. இப்புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆந்திர ரசிகர்கள் ’இப்படி குண்டாக இருந்தால் மறுபடியும் பட வாய்ப்பு வராது. நீங்கள் பழைய அனுஷ்காவாக ஸ்லிம்மாகவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.