Brother Anna told me that my brother had been eliminated and put on the back of the jule

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பிரேக்கிங் பிரேக்கிங் என தமிழக மக்களை கட்டிப்போட்டு வைத்திருந்த ஒட்டுமொத்த தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரெட்டிங்கை பிக்பாஸ் என்ற ஒரே நிகழ்ச்சியின் மூலம் தன்வசபடுத்திக்கொண்டது விஜய் டி.வி. தமிழகத்தின் அனைத்து மூலை முடுக்கெல்லாம் பிக்பாஸ் பிக்பாஸ் என பேமஸாகிவிட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த நிகழ்ச்சியில் அதிகம் பேசப்பட்டதும் வலைதலங்களில் பல்வெறு விமர்சனங்களுக்கு ஆளானதும் ஜுலி என்ற கேரக்டர்தான். இவருக்கு ஆரம்பத்திலிருந்தே பரணி தான் ஆதரவாக இருந்தார். ஆர்த்தி காயத்ரி இருவரும் ஜுலியை அசிஙக படுத்திய நேரத்தில், உன்னை எல்லோரும் வெண்டுமென்றே டார்கெட் செய்கிறார்கள், நீ திருப்பி அடி என ஆறுதல் சொன்னவர் பரணி.

அதன் பிறகு அண்ணா அண்ணா என பாச மழை பொழிந்த ஜுலியானா சமீபத்தில் அவர் பரணியையே எலிமினேட் செய்ய சொன்னது பலருக்கும் அதிர்ச்சியடைய வைத்ததுதான்.

இதுக்குறித்து பரணியின் தங்கை சத்யா தேவி கூறுகையில்; ‘கஞ்சா கருப்பு, காயத்ரி ரகுராம், ஆர்த்தி எனஎல்லாம் பரணி அண்ணனின் முகத்திற்கு நேராக திட்டுகிறார்கள். ஆனால், அண்ணா அண்ணா என்று கூறி நடித்து என் அண்ணனை எலிமினேட் செய்ய சொல்லி முதுகில் குத்தி விட்டார் ஜுலி. இப்படி செய்தது எங்கள் எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.