பிகில் பட வெற்றிக்குப் பின் தளபதி விஜய்யின் புகழ் பாலிவுட் வரையில் பட்டொளி வீசி பறந்தது. அதன் விளைவுதான் மாஸ்டர் படத்தின் பிஸ்னஸ் விண்ணைத் தொட்டதெல்லாம். இந்த புகழ் எந்தளவுக்கு அவருக்கு நன்மையை கொண்டு வந்ததோ அதே அளவுக்கு பஞ்சாயத்தையும் இழுத்திருக்கிறது. நடிகர் விஜய்யின் வீடு உள்ளிட்ட சொத்துக்களில் நடத்தப்பட்ட மெகா ரெய்டும், அவரை நெய்வேலி படப்பிடிப்பு தளத்தில் இருந்து வருமான வரித்துறையினர் ஏதோ கைதி போல் அள்ளிக் கொண்டு வந்ததும் தேசிய அளவில் சினிமா வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய்க்காக சிலர் உச்ச்ச்ச் கொட்ட, கணிசமான நபர்களோ ‘வரி ஒழுங்கா கட்டியிருந்தா எதுக்கு பயப்படணும்? பஞ்ச் டயலாக்கெல்லாம் சினிமாவுலதான்’ என்று வம்பிழுத்தனர் தளபதியிடம். 


இது ஒரு புறமிருக்க, நெய்வேலி டூ சென்னை இன்னோவா காரில் விஜய்யை அள்ளிக் கொண்டு வந்து கொண்டிருக்கையிலேயே அவரிடம் விசாரணையை போட்டுப் பொளந்துள்ளனராம் வருமான வரித்துறை அதிகாரிகள். விஜய்யின் பெயரிலுள்ள சில சொத்துகள், அவரது அப்பா - அம்மா பெயரிலுள்ள வெகு சில சொத்துக்கள், விஜய்யின் மனைவி சங்கீதா பெயரிலுள்ள எக்கச்சக்க சொத்துக்கள், விஜய்யின் மாமனார் பெயரிலுள்ள ஏராளமான சொத்துக்கள் என்று கிட்டத்தட்ட ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் விபரத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்திருந்தனராம். அதை அப்படியே தளபதியிடம் காட்ட, ஏதோ ஷுட்டிங்கில் டயலாக் பேப்பரை எடுத்து வாசிப்பது போல் வாசித்துவிட்டு, அதிர்ந்திருக்கிறார். 


’இவ்வளவு சொத்துக்களையும் அட்டாச் பண்ணிடலாமா?’ (பறிமுதல் பண்ணிடலாமா? எனும் ரேஞ்சில்) என கேட்டுள்ளனர். அடுத்த நொடியில் ஏகத்துக்கும் அப்செட்டான விஜய் அரண்டு போய் ‘இருபத்தஞ்சு வருஷமா உயிரை கொடுத்து ஆடி, நடிச்சு கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிச்ச சொத்து, புகழ் இதெல்லாம். ஏதோ ஒரு காரணத்துக்காக டேமேஜ் பண்ணிடாதீங்க ப்ளீஸ். என்ன பிரச்னைன்னு ஓப்பனா கேளுங்க, உள்ளதை சொல்றேன்.” என்றாராம் உடைந்த குரலில். அதிகாரிகளுக்கு அடக்கமுடியாத சிரிப்பாம்! அதானே, ...என்ன பிரச்னைன்னு அவங்களுக்கு என்ன தெரியும்?