இதில், 'கலகலப்பு-2' படம் மட்டுமே வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து  இந்த ஆண்டு, நீயா-2, மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்த 'மதுர ராஜா' ஆகிய படங்கள் வெளியாகின. இவ்விரு படங்களும் ரிலீசான சத்தமே தெரியாமல் மீண்டும் பெட்டிக்குள் முடங்க, அடுத்து, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடித்திருக்கும் 'கேப்மாரி' படம் ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது.

இப்படி சொல்லிக்கொள்ளும்படி தொடர் ஹிட்டை கொடுக்க முடியாமல் சொதப்பிவருவதால் நடிகர் ஜெய், அதிரடி முடிவை எடுத்து நடிக்கும் படம்தான் 'பிரேக்கிங் நியூஸ்'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்க சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார் ஜெய்.திருக்கடல் உதயம் தயாரிப்பில் மிகபிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ப்ரேக்கிங் நியூஸ்' படத்தில், 100 நிமிடங்கள் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள்தானாம். 

இவையனைத்தும்  சர்வதேச தரத்திற்கு இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. 'சிவாஜி', 'அந்நியன்', 'முதல்வன்' உள்ளிட்ட படங்களின் விஷுவல் எஃபெக்ட்ஸ் டீமில் பணியாற்றியவர் ஆண்ட்ரூ பாண்டியன் என்பது கவனிக்கத்தக்கது.இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக புதுமுக நடிகை பானு நடிக்கிறார். 

ஸ்டைலிஷ் வில்லன்களாக தேவ் ஹில் மற்றும் ராகுல் தேவ் நடித்துள்ளனர். மேலும், ஜெயப்பிரகாஷ், இந்திரஜா, சந்தனா பாரதி, மோகன் ராம், பழ.கருப்பையா, பி.எல்.தேனப்பன், மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


'பிரேக்கிங் நியூஸ்' படத்தில் வழக்கமான கிராபிக்ஸ் காட்சிகள் அல்லாமல், நேரடியாக நிஜமான ஷூட்டிங் தளங்களுக்கு சென்று, அங்கு பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் நடத்தி வருகின்றனர். இப்படத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாலிவுட்டில் வெகுவாக பாராட்டப்படும் ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, விஷால் பீட்டர் இசையமைக்கிறார். ஆன்டனி படத்தொகுப்பை கவனிக்க, விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை தினேஷ் குமார் கையாளுகிறார். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் நடிகர் ஜெய்க்கு, சூப்பர் ஹிட் படமாக 'ப்ரேக்கிங் நியூஸ்' இருக்கும் என எதிர்பார்க்கலாம்.