Asianet News TamilAsianet News Tamil

#Breaking நாளை 'சக்ரா' நாளை படம் வெளியாக இருந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாளை திரையரங்குகளில் வெளியாக இருந்த சக்ரா படத்தின் மீதான இடைக்கால தடையை நீக்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

Breaking chakra movie released tomorrow court order
Author
Chennai, First Published Feb 18, 2021, 3:31 PM IST

இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் சக்ரா படத்தில் விஷால் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

முதலில் ஓடிடி தளத்தில் 'சக்ரா' படத்தை வெளியிட, பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தற்போது 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், திரையரங்கில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்தது. இந்நிலையில் 'சக்ரா' படத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடிகர் விஷால் - நடிகை தமன்னா நடிப்பில் வெளியான 'ஆக்‌ஷன்' என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். 

Breaking chakra movie released tomorrow court order

படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் தங்கள் நிறுவனத்திற்கு ஆனந்தன் கூறிய அதே கதையை தற்போது நடிகர் விஷால் தனது நிறுவனத்திற்கு 'சக்ரா' என்ற பெயரில் எடுத்துள்ளதாகவும், அதனால் அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்,  டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் ‘சக்ரா’ படத்தை வெளியிட சென்னை உயர் நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Breaking chakra movie released tomorrow court order

இந்த வாரம் 19 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில்... படக்குழுவினரும் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஏற்கனவே பல பிரச்சனைகளை கடந்து வெளியாக தயாரான 'சக்ரா' படத்திற்கு உயர் நீதி மன்றம் தடை விதித்துள்ளதால். குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகுமா என்கிற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம்... "சக்ரா படம் வெளியாக விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் படத்தின் இரண்டு வார வசூல், மார்ச் 5 ஆம் தேதி வரையிலான தியேட்டர் வசூல் தொகை குறித்து மார்ச் 10 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios