Asianet News TamilAsianet News Tamil

#Breaking ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக முதல்வரை சந்தித்து பேசிய நடிகர் கார்த்தி..!

நடிகர் கார்த்தி ஒளிபதிப்பு திருத்த சட்டம் தொடர்பாக சற்று முன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். 
 

Breaking actor karthi meet chief minister for Cinematography Amendment Act
Author
Chennai, First Published Jul 5, 2021, 6:21 PM IST

நடிகர் கார்த்தி ஒளிபதிப்பு திருத்த சட்டம் தொடர்பாக சற்று முன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். 

ஒளிபரப்பு திருத்த சட்டம் கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்டதில் இருந்தே இந்தியா முழுக்க உள்ள பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ஜூலை 2ம் தேதி வரை புதிய சட்ட திருத்த வரைவின் மீதான கருத்துகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட 1400 கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர்.

Breaking actor karthi meet chief minister for Cinematography Amendment Act

அதே போல் தமிழ் திரையுலகின் முன்னணி  நடிகரான சூர்யா ஒளிபரப்பு சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை போட்டார்.  அதில் கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக... அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல... சட்ட வரைவு குறித்து கருத்து தெரிவிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்று பதிவிட்டிருந்தார். இவரை தொடர்ந்து, வெற்றிமாறன், இயக்குனர் அமீர், இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட பலர் தொடர்ந்து தங்களுடைய கருத்தை அறிக்கை மூலமாகவும், ட்விட்டரிலும் தெரிவித்தனர்.

Breaking actor karthi meet chief minister for Cinematography Amendment Act

தற்போது, நடிகர் கார்த்தி, ரோகினி ஆகியோர் முதலமைச்சர் முக.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி, "ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக முதல்வருடன் பேசியுள்ளதாகவும், ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக முதல்வர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

Breaking actor karthi meet chief minister for Cinematography Amendment Act

இந்த திட்டம், கருத்து சுதந்திரத்தை மட்டும் இன்றி, திரைத்துறையினர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில்  உள்ளது மட்டும் இன்றி,  இந்த திட்டத்தை மத்திய அரசு எப்படி நடைமுறை படுத்தும் என்பது குறித்து விளக்கவில்லை என தெரிவித்துள்ளார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios