நித்யாவிற்கு "பிபி"...பாலாஜிக்கு "பீப்"..! பிக்பாஸ் நிகழ்ச்சியால் நொந்துபோன கமல்..!  

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்று அமோகமாக நடந்து வருகிறது .

இந்நிலையில் நேற்று மமதி சாரி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கு தினமும் பல டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

பாலாஜி மற்றும் நித்யா

இந்த நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் அவருடைய மனைவி நித்யா இருவரும் கலந்துக்கொண்டு உள்ளதால் நிகழ்ச்சி அவ்வப்போது சூடு பிடிக்கிறது.

அதில் குறிப்பாக, பாலாஜியை பொறுத்த வரையில் நித்யாவுடன் அடிக்கடி சண்டையிட்டு  வருகிறார். அதுவும் குறிப்பாக தகாத வார்த்தைகளால் நித்யாவை திட்டுகிறார்.

இதனை எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேயர்களுக்கு குறும்படமாக காண்பிக்கும் போது, பீப் ஒலி போட்டு மறைக்கப்படுகிறது

இது ஒரு பக்கம் இருக்க வருடைய மனைவியான நித்யா பாலாஜியுடன் பேசினாலே அதிக டென்ஷன் ஆகி விடுகிறார்.

ஆக மொத்தத்தில், இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரையில் நித்யாவிற்கு பிபி எகிறுகிறது. பாலாஜிக்கு பேசினாலே பீப் ஒலி எழுப்ப நேரிடுகிறது

நேற்றைய தினம், மம்தா நிகழ்ச்சியில் இருந்து வெளியில் செல்லும் போது மும்தாஜ் மிகவும் சோகமானார்...

மமதாவின் பிரிவை தாங்க முடியாமல் தேம்பி தேம்பி அழுத மும்தாஜ் இந்த காட்சியை பார்த்த அனைவரும் மிகவும் கண்ணீர் சிந்தினர்.

நேற்றைய நிகழ்ச்சியின் மிக சிறப்பான ஒன்று ஸ்ருதிஹாசனும் கமலும் இணைந்து பாடலை பாடியதே....இந்த நிகழ்சிக்கு நேற்று இது கூடுதல் பலமாக அமைந்தது.