பிரபல நடிகை ராதிகா ஆப்தேவை திரையுலகில் இருந்து, தடைசெய்ய வேண்டுமென பலர் ஹேஷ்டேக் வெளியிட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல நடிகை ராதிகா ஆப்தேவை திரையுலகில் இருந்து, தடைசெய்ய வேண்டுமென பலர் ஹேஷ்டேக் வெளியிட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில், 'தோனி', 'கபாலி', உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழ் மொழி படங்களில் சேலையை இழுத்து மூடி தேடி நடித்தாலும், பாலிவுட் திரையுலகில் படுமோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் இப்படிப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது புகைப்படங்களையோ வெளியிடவில்லை என்றாலும் இவரது பழைய ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு தான் இவரை திரையுலகில் இருந்து தடை செய்ய வேண்டும் என பலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ராதிகா ஆப்தே, டாப்ஸி, தீபிகா படுகோன், கரீனா கபூர், உள்ளிட்ட பிரபலங்கள் சமீபகாலமாக பாலிவுட் திரையுலகில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும், ராஜ் குந்த்ரா ஆபாச விவகாரம் குறித்த சர்ச்சைக்கு, தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்காமல் மௌனம் காத்து வருவது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது.

குறிப்பாக நடிகை ராதிகா ஆப்தேவை குறிவைத்து பலர், நடிகைகள் இதுபோன்ற ஆபாச படங்களில் நடிப்பதால் தான் இந்திய கலாச்சாரத்தை கெடுவதாகவும் இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்தும் செயலாக இது இருப்பதாகவும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் சில கோவில் சிலைகளில் உள்ள சிற்பங்களைப் பற்றி கேள்வி எழுப்பி நடிகைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில், அதற்கு பல சிறு குழந்தைகளை கற்பழிப்பது போன்ற எந்த ஒரு கோயில்களிலும், மசூதிகளிலும், சர்ச்சுகளிலும், சிற்பங்கள் இடம் பெற்றது இல்லை என கூறி பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த விவகாரம் தற்போது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…