ஆண்கள்-பெண்கள் இருவருமே போதை வஸ்துவே என நடிகர்ரும், இயக்குநருமான பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆண்கள் தினத்தை முன்னிட்டு அவரது ட்விட்டர் பதிவில், ‘’ஆண்+கள் தினமாம் இன்று! மீதி தினங்கள்? பெண்கள் தினங்களே! தென்னங்கள், பனங்கள் அதுவும் ஒரு மரத்துக் கள் உடலுக்கு நல்லதாம். (சுவைத்ததில்லை இதுவரை) தெ.கள், ப.கள் போல. ஆண்கள்-பெண்கள் இருவருமே போதை வஸ்துவே! ஒரு மரம் போல, ஒரே மனமாய் வாழ முடிவதில்லை. தில்லை கடவுள் போல ஒரு ஆணுடலின் பாதிக்குள் ஒரே ஒரு பெண்ணோ, ஒரு பெண்ணுடலின் மீதிக்குள் ஒரே ஒரு ஆணும் மட்டுமே அபூர்வம்! (அழகி’படம் போல அழகன்’ கதைகள் ஏராளம்) ஆண், பெண் பேதம் மனதிற்கு இல்லை. மனம் போல் வாழ்வோம்- யார் மனமும் நோகாமல்...’’ என அவர் பதிவிட்டுள்ளார்.

 

புதியபாதை படத்தில் தன்னுடன் நடித்த நடிகை சீதாவை காதல் திருமணம் செய்து கொண்டார் பார்த்திபன். பிறகு பார்த்திபனை பிரிந்த சீதா தனியாக வசித்து வருகிறார். அதனை மனதில் வைத்தே இந்த பதிவை பார்த்திபன் பகிர்ந்துள்ளதாக கருதப்படுகிறது.