அஜீத்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’படத்தைத் தயாரித்துவரும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மீது பிரபல மலையாளப்படத் தயாரிப்பாளர் வழக்கு தொடுத்துள்ளார். இதனால் ‘நேர்கொண்ட பார்வை’ கேரளாவில் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்திப்படம்  ’பதாய் ஹோ’.இனி தென்னிந்திய மொழிகளில் பட தயாரிக்க அதிக கவனம் செலுத்த முடிவெடுத்திருப்பதால்  இப்படத்தின் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளின் ரீமேக் உரிமையையும் போனிகபூர் வாங்கியிருந்தார். 

படத்தின் நாயகி தன்னுடைய காதலை வீட்டில் சொல்ல வரும் போது, 50 வயதைக் கடந்த தாய் கருவுற்றிருப்பார்.இதை ஒட்டி அவரது  திருமணத்தில் ஏற்படும் குழப்பமும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த செய்தியை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதே ’பதாய் ஹோ’ படத்தின் கதை. கதை சிக்கலாக இருந்தாலும், நகைச்சுவையாக கொண்டு சென்ற விதம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

’பதாய் ஹோ’வை போனிகபூர் மலையாளத்தில் தயாரிக்கவிருக்கிறார் என்ற செய்தி பரவிய சில தினங்களிலேயே அப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘பவித்ரம்’ மலையாளப்படத்திலிருந்து சுட்ட கதை என்ற தகவல் வரவே ’பதாய்ஹோ’ படத்தைத் தாமதமாகப் பார்த்த பவித்ரம் குழு, அப்படத்துக்கான உரிமை தங்களுக்கு வேண்டும் என்று நீதிமன்றம் சென்றதாம். நீதிமன்றத்தில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆக இனி இப்படத்தைத் தமிழிலோ மலையாளத்திலோ தயாரிப்பதாக இருந்தால் முறைப்படி தங்கள் அனுமதி பெற்றுத்தான் ரீமேக் செய்யவேண்டும். இல்லாவிட்டால்...?’ என்று மிரட்டியிருக்கிறாராம் பவித்ரம் படத்தயாரிப்பாளர்.