ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் போனிகபூர்...

First Published 11, Jan 2019, 4:12 PM IST
boney kapoor to take sridevi biopic
Highlights

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க முடிவு செய்திருப்பதாகவும், அது இந்தியாவிலேயே அதிக மொழிகளில் தயாரிக்கப்பட்ட முதல் படமாகவும் இருக்கும் என்றும் அவரது கணவர் போனி கபூர் கூறுகிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க முடிவு செய்திருப்பதாகவும், அது இந்தியாவிலேயே அதிக மொழிகளில் தயாரிக்கப்பட்ட முதல் படமாகவும் இருக்கும் என்றும் அவரது கணவர் போனி கபூர் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் நடிகையாக அறிமுகமாகி பாலிவுட் வரை சென்று முன்னணி நடிகையானவர் ஸ்ரீதேவி.  தனது 4 வது வயதில் ‘கந்தன் கருணை’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,  தமிழ்,தெலுங்கு, இந்தி,கன்னடம், மலையாளம் என்று இந்தியாவின் பெருவாரியான மொழிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக விளங்கிய அவர், தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு தனது உறவினர் வீட்டு திருமண விழாவில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி அங்கு தங்கி இருந்த ஓட்டல் குளியலறை தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்தார். தற்போது அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் இறுதி ஆசையாக அஜீத்தை வைத்து பிங்க் படத்தை ரீமேக்காக தயாரிக்கும் போனி கபூர், அடுத்து மிக விரைவில் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க விரும்புவதாகவும், அப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட்ட, இந்தியாவிலேயே அதிக மொழிகளில் தயாரான ஒரே படம் என்ற பெருமையை அடையும் படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

loader