“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார். கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார்.

 

இதையும் படிங்க: “காக்க காக்க” படத்தில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லையாம்... ஜோதிகா சிபாரிசு செஞ்ச ஹீரோக்கள் யார் தெரியுமா?

ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஒட்டு மொத்தமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து ஏற்கனவே வெளியான தகவலில், இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா நடிப்பதாகவும் கூறப்பட்டது. முதன் முறையாக இந்தி நடிகை ஹுயூமா குரேஷி  அஜித்துடன் ஜோடி நடித்துள்ளார். அஜித்திற்கே டப் கொடுக்கும் அளவிற்கு பைக் சீனில் செம்ம மாஸாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.


தற்போது  “வலிமை” படம் குறித்து வெளியாகியுள்ள தகவலில் இந்த படத்தை 'பான் இந்தியா' திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் போனி கபூர் இருப்பதாக கூறப்படுகிறது. பல மொழிகளில் ஒரே நேரத்தில் ஒரு படத்தை திரையிட்டால் வசூலை குவிக்கலாம் என்கிற நோக்கில் தான் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. தமிழில் மட்டுமே எடுக்கப்படும் இந்த படத்தை, டப்பிங் கலைஞர்களை வைத்து, இந்தி உள்ளிட்ட இன்னும் சில மொழிகளில் அந்தந்த மொழி படம் போலவே டப்பிங் செய்ய தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: கணவரை கட்டி அணைத்த படி குஷ்பு... குறையாத அழகுடன் ஜொலிக்கும் கோலிவுட் தம்பதியின் வைரல் போட்டோ...!

ஏற்கனவே 80 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், தொழிலாளர்களின் உயிர் தான் முக்கியம் அதனால் கொரோனா முழுவதுமாக அடங்கியதும் ஷூட்டிங்கை வைத்துக்கொள்ளலாம் என போனி கபூரிடம் அஜித் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அம்மாநில அரசு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் ஐதராபாத்தில் தல அஜித் இல்லாமல் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் போனிகபூர். அஜித் இல்லாத பிற நடிகர், நடிகைகள் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.