boney kapoor daughter has covid : கொரோனாவால் முடங்கிய வலிமை தயாரிப்பாளர் வீடு..குடும்பத்துடன் தனிமை..
boney kapoor daughter has covid : போனி கபூரின் இளைய மகள் குஷி கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, போனி கபூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் கணவருமான போனி கபூர். தமிழில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் ஏற்கனவே வெளியான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் வலிமை படத்தை தயாரித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு. பின்னர் கொரோனா மூன்றாம் அலை காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்திருந்த போனி கபூர், இதுவரை தங்களுக்கு உறுதுணையாக இருந்த விநியோகஸ்தர்களுக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே தற்போது சினிமா துறையினரை குறி வைத்து தாக்கி வரும் கொரோனா தொற்று போனி கபூர் வீட்டையும் தாக்கியுள்ளது. போனி கபூர் - ஸ்ரீ தேவி தம்பதியினருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என 2 மகள்கள் உள்ளனர். மூத்தவரான ஜான்வி கபூர், பாலிவுட்டில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளார். அவரது நடிப்பில் வெளியான குஞ்சன் சக்சேனா திரைப்படம் ரசிகர்க மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றறது. மிலி, ஜெரி ஆகிய படங்கள் நிறைவு பெற்று வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன.
இந்நிலையில் போனி கபூரின் இளைய மகள் குஷி கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, போனி கபூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.