சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு, ஏற்கனவே கடந்த 2019  ஆம் ஆண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தற்போது மர்மநபர் ஒருவர், ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல் கட்டு பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தது பீதியை ஏற்படுத்தியது.

இதனால், மோப்ப நாய்களுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள், போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள ரஜினிகாந்தின் வீடு முழுவதும் சோதனை செய்தனர்.

ஆனால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல் போல் எந்த வெடி குண்டும் கிடைக்க வில்லை. எனவே இது வதந்தி என தெரியவந்தது. இதை தொடர்ந்து, வெடுக்குண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என விசாரணை நடத்தியதில், ஏற்கனவே ரஜினியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே நபர் தான் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தால் சில மணி நேரம் போயஸ் தோட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.