இந்தி திரை உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் இந்த ஆண்டு தீபாவளியை நட்சத்திரங்கள் ரன்பீர் கபூர், வித்யா பாலன், சஞ்சய்தத், பர்கான் அக்தர் உள்ளிட்ட பலர் கூடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

மும்பையில் உள்ள ஜல்சா பகுதியில் அமிதாப் பச்சனின் வீடு அமைந்துள்ளது. தீபாவளியன்று பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களுக்கே உரிய ஆடம்பரமான உடையில் வந்து அமிதாப் பச்சன், அவரின் மனைவிஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மனைவி ஐஸ்வர்யா ராய், குழந்தை ஆராதயா ஆகியோருடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.

தீபாவளியன்று பிக் பி என்று அடைமொழியுடன் அழைக்கப்படும் அமிதாப், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பாதி வெள்ளை மற்றும் தங்க நிறத்தில் ஆடை அணிந்தும், ஜெயா பச்சன் சிவப்பு, பச்சை நிறத்தில் குர்தாவும், ஐஸ்வர்யா ராய் மகள் அராதயா பிங்க் வண்ணத்தில் உடை அணிந்து அழகாக காட்சியளித்தனர்.

ககானி-2 படத்தில் நடித்துள்ள வித்யா பாலன், வெள்ளை, பச்சை கலந்த பாவாடை, தாவனியில் வந்து அனைவரையும் அசத்தினார். அவரின் ககானி-2 படத்துக்காக அனைவரிடமும் வாழ்த்துக்களையும், பரிசுகளையும் பெற்றார். உடன் அவரின் கணவர் சித்தார்த் ராய் கபூரும் வந்திருந்தார்.

சமீபத்தில் திருமண் செய்து கொண்ட பிபாசு பாசு, தனது கணவர் கரண்சிங்குடன் கறுப்பு நிற உடையில் வந்து தங்கள் முதல் தீபாவளியைக் கொண்டாடினர். இதில் பிபாசுபாசு ‘சப்யாசாச்சி’ எனும் சேலை அணிந்து அனைவரையும் கவர்ந்தார். 
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் சளைக்காமல் செல்பிகளையும், புகைப்படங்களையும் எடுத்து இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்து தள்ளினர்.

பர்ஹான் நீலநிற ஷெர்வானியில், ‘ராக் ஆன்2’ படத்தில் தன்னோடு நடித்த நடிகை சாராதாவுடன் வந்திருந்தார். சாரதா பிங்க் நிறத்தில் லெகாரியா அணிந்திருந்தார்.

ஆதித் ராவ் ஹைதாரி சிவப்பு நிறத்தில் சோலியும், நடிகர் சைப் அலிகான் மகள் சாரா நீலம், சில்வர் நிறத்தில் ஆடையும் அணிந்து வந்தனர். மேலும், இந்தி பட இயக்குநர் ரமோ டி சோசா, நடிகர் அப்தப் ஷிவ்தாசனி, பாடகர் மிகாசிங், பேஷன் டிசைனர் ராக்கி ஸ்டார் ஆகியோரும் வந்திருந்தனர்.

இயக்குநர் அப்பாஸ்-மஸ்தான், சோனு சூத், ராஜ்குமார் சந்தோஷி, பவானா, சுங்கே பாண்டே, கிரன் கேர் அவரின் மகன் சிக்கந்தர், தியா மிர்சா, பரசூன் ஜோஷி, கொங்கனா சென் சர்மா, ஜே.பி. தத்தா அவரின் குடும்பத்தினர், நேகா தூபியா உள்ளிடோடரும் தீபாவளி நிகழ்ச்சியில்கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.