பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை அவரது ரசிகர்கள் தலைமேல் வைத்து கொண்டாட காரணம் இல்லாமல் இல்லை. எப்போதும் அரைத்த மாவையே அரைக்காமல் புதிதாக ஏதாவது செய்து பார்க்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். தனது மனைவி, குழந்தைகள் மீது அதீத பாசம் கொண்ட ஷாரூக்கானின் குடும்ப படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம். திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும் ஷாரூக்கான், கவுரி தம்பதி இளம் ஜோடி போல வலம் வருகின்றனர். பார்ட்டி, சினிமா நிகழ்ச்சிகள், அவார்ட் பங்கஷன் என அனைத்திலும் ஒன்றாக வலம் வரும் இந்த ஜோடியைப் பார்த்து கண் வைக்காதவர்கள் இருக்க முடியாது. இந்த சமயத்தில் மனைவி கவுரிக்காக ஷாரூக்கான் செய்த ஒரு காரியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

மும்பையில் நடைபெற்ற தி பவர் லிஸ்ட் 2019 என்ற நிகழ்ச்சியில் ஷாரூக்கான் தனது மனைவி கவுரி கான் உடன் கலந்து கொண்டார். அப்போது கவுரி அணிந்து வந்திருந்த மிக நீண்ட கவுன் தரையில் உரசியது. அதனை கவனித்த ஷாரூக்கான், தரையில் விழுந்த கவுனை தனது கைகளால் தாங்கி பிடித்தப்படி, கவுரியின் பின்னால் நடந்து சென்றார்.

பாலிவுட்டே அன்னார்ந்து பார்க்கும் உயரத்தில் இருக்கும் ஷாரூக்கான், சுற்றியுள்ள மீடியாவையோ, சக பாலிவுட் நடிகர், நடிகைகளையோ குறித்து கவலை கொள்ளாமல் சட்டென மனைவிக்கு உதவிய செயல் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பார்த்த ஷாரூக் ரசிகர்கள் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர். 

தக்க சமயத்தில் கர்வம் இன்றி மனைவிக்காக அடிபணிந்த கிங் கான் தான் ஒரு சிறந்த மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக நெட்டிசன்கள் புகழ்ந்துள்ளனர். தனது மனைவியை மட்டுமல்ல, அவர் அணிந்து வந்துள்ள கவுனை கூட சரியாக கவனித்துக் கொண்ட ஷாரூக்கான், கவுரி மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதை காண்பித்துள்ளார். கவுரி கானின் கவுனை ஷாரூக்கான் எடுத்துச் செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விட்டுக்கொடுத்து செல்வது தான் நல்ல இல்லறத்திற்கு தேவையான முக்கியமான அம்சம் என்பதை ஷாரூக்கான், கவுரி ஜோடி நிரூபித்துள்ளனர்.