பிரபல பாலிவுட் மூத்த நடிகர், திலிப் குமார் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திரையுலகில் அசைக்க முடியாத அளவிற்கு தன்னுடைய நடிப்பில் மூலம் முத்திரை பதித்தவர் நடிகர் திலீப் குமார். 1944–ம் ஆண்டு நடிக்கத் தொடங்கிய அவர் தேவதாஸ், மதுமதி, ஆஜாத், முகல்–ஏ–ஆஜாம், கங்கா ஜமுனா உள்பட 60–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

தற்போது இவருக்கு 90 வயதாகிறது. வயோதிகம் காரணத்தால் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பாலி மலைக் குன்றில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு திடீரென அவருக்கு நுரையீரல் சம்மந்தமான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவரை குடும்பத்தினர் லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. திலீப் குமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

பாலிவுட் திரையுலகில் மூத்த நடிகரான இவர் மருத்துவமனையில் அனுமதிப்பக்கட்டுள்ள செய்தி பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.